சென்னை பட்டினப்பாக்கம் அரசு மீன் அங்காடியில் எழுத்தாளர் சாரு நிவேதிதா மீன்களை வாங்கியதாகவும், அவை அழுகிய நிலையில் விற்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ட்விட்டர் அவர் எழுதியுள்ள பதிவில், “வணக்கம். நான் எழுத்தாளர் சாரு நிவேதிதா. பட்டினப்பாக்கம் அரசு மீன் அங்காடியில் மீன் வாங்கும்போது கடந்த மூன்று முறையும் கெட்டுப்போன மீனே கிட்டியது. புகார் செய்தும் பலனில்லை. இன்று 1500 ரூ.க்கு அயிலா. கெட்டதைக் கொடுத்து விட்டனர். கனிவுகூர்ந்து உதவ வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.