சென்னை:சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்று சட்டப்பேரவை நிகழ்வில், ஒன்றிய அரசுஎன்று அழைப்பது குறித்து கோவை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி பேசினார்.
"இதுவரை மத்திய அரசு என்று அழைத்துவிட்டு, தற்போது ஒன்றிய அரசு என அழைக்கிறீர்கள். ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அதன் மணம் மாறாது. அதுபோலத்தான், ஒன்றிய அரசு என்று அழைப்பதால் மத்திய அரசின் அதிகாரத்தை கூட்டவோ குறைக்கவோ முடியாது" என்றார், வானதி சீனிவாசன்.
ரோஸ் என்றும் மல்லிகை ஆகாது
இதற்கு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துப் பேசும்போது, 'ரோஜா ரோஜாதான், ரோஜாவை நாங்கள் மல்லிகை என்று அழைக்கவில்லை. ரோஜா என்றும் மல்லிகை ஆகாது.