சென்னை ஆவடி அடுத்த காட்டூர் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன், லீலாவதி தம்பதியினர். இந்நிலையில் இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். பின்னர் மாலை லீலாவதி வீடு திரும்பியபோது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த லீலாவதி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது தான், பீரோவில் இருந்த 3 லட்சம் மதிப்புள்ள 10 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து லீலாவதி குடும்பத்தினர், ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.