இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட துரித சோதனைக் கருவியின் அடக்கவில்லை 245 ரூபாய். இந்நிறுவனத்திடம் கருவியின் தரத்தை உறுதி செய்து நேரடியாக கொள்முதல் செய்யாமல் வேறொரு விநியோகஸ்தர் மூலம் ரூ. 600க்கு ஐ.சி.எம்.ஆர். கொள்முதல் செய்யப்பட்டது ஏன்?
ரேபிட் டெஸ்ட் கருவிகளை ஐ.சி.எம்.ஆர். வாங்கிய ஆர்க் நிறுவனத்திடம் வாங்காமல் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாத விநியோகஸ்தரான ஷான் பையோடெக் மூலம் ஒரு கருவி ரூ. 600க்கு தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்தது ஏன்? தகுதியான நிறுவனத்திடம் தரமான சோதனைக் கருவிகளை வாங்கமுடியாத மத்திய, மாநில அரசுகள் கரோனா நோயிலிருந்து 136 கோடி மக்களை எப்படி காப்பாற்றப்போகிறார்கள்?