தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நகை, பணம் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்! - Chennai

சென்னை: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகையை கொள்ளையடித்து சென்ற ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கொள்ளை வழக்கு
கொள்ளை வழக்கு

By

Published : Apr 28, 2021, 6:59 PM IST

திருவொற்றியூர், கலைஞர் நகர் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் ஜோதி, இவரது கணவர் ராஜகோபால். தனியார் பள்ளி நடத்திவருகிறார். கடந்த வாரம் இவர்களின் வீட்டில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, வீட்டிலிருந்த 7 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுதொடர்பாக புகாரின் பேரில் கண்காணிப்புக் கேமரா உதவியுடன் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கண்காணிப்புக் கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சோதனையிட்டதில் சிக்கிய நபர்கள்,

  • திருவொற்றியூர், மேற்கு மாட வீதி பகுதியைச் சேர்ந்த நாகராஜ்,
  • கரிமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக்,
  • புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் முகமது சாதிக்,
  • ராயபுரம் பகுதியைச் சேர்ந்த கீரன்,
  • புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கலையரசன் என்பது தெரியவந்தது.
    கொள்ளை வழக்கு

கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் மூன்று பேர் ஆர்.கே நகர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாமாண்டு இளங்கலை படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details