அட்டிகா கோல்ட் நிறுவனத்தில் பணப்பரிவர்த்தனை அலுவலராக பணிபுரியும் கிரீஷ் என்பவர், நேற்றிரவு 20 லட்சம் ரூபாய் பணத்தோடு பெங்களூரிலிருந்து பேருந்து மூலம் சென்னை வந்துள்ளார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கி தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அவர் சென்றுகொண்டிருந்தபோது, காரில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் இரும்பு ராடுடன் முகமூடி அணிந்து, கிரிஷ் கையிலிருந்த 20 லட்சம் ரூபாய் பணப்பையைப் பறிக்க முயன்றுள்ளனர்.
உடனே சுதாரித்த கிரீஷ் அருகிலிருந்த கடைக்குள் ஓடியும், முகமூடிக் கொள்ளையர்கள் அவரை விடாமல் துரத்திச் சென்றுள்ளனர். அப்போது, கடையின் பாதுகாவலர் சையத் சுல்தான் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதையும், ’திருடன்’ என்று கூச்சலிட்டதையும் தொடர்ந்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.