சென்னை: திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை (44). இவர் அண்ணனூர் ரயில் நிலையம் அருகே ஸ்ரீ சக்தி நகரில் ஜோதி ஹோம் அப்ளையன்ஸ் மற்றும் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மீண்டும் இன்று காலை கடைக்கு வந்த போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்லதுரை உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்த 2 லட்சம் மதிப்பிலான 10 ஆண்ட்ராய்டு செல்போன்கள் மற்றும் 4,000 ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து செல்லதுரை உடனடியாக திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.