தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பயங்கர ஆயுதங்களுடன் இருதரப்பினர் மோதல் - சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை - சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை

சென்னை ஆர்.கே. நகரில் முன்விரோதம் காரணமாக கத்தி, உருட்டுக் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதறவைக்கும் சிசிடிவி காட்சி
பதறவைக்கும் சிசிடிவி காட்சி

By

Published : Oct 11, 2021, 6:08 PM IST

Updated : Oct 11, 2021, 6:32 PM IST

சென்னை: கொருக்குப்பேட்டை அன்பழகன் தெருவில் நேற்று முன்தினம் (அக்.09) இரவு சிலர் கத்தி, உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். இதுதொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் ஆர்.கே. நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கொருக்குப்பேட்டை அன்பழகன் தெருவைச் சேர்ந்த முருகவேல், சூர்யா ஆகிய இருவருக்கும் தொழில்போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், முருகவேலின் தந்தை வாசு, தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது, 'அந்த வழியாக வேகமாக வந்து மினிவேனை நிறுத்தி, ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறாய்' என ஓட்டுநரிடம் கேட்டுள்ளார்.

இருதரப்பினரிடையே மோதல்

மினிவேனை ஓட்டி வந்த விக்கி என்பவர், இதுகுறித்து சூர்யா, அவரது உறவினர்கள் ஆகியோரிடம் கூறினர்.

இதனால், சூர்யா, முருகவேல் வீட்டின் அருகே சென்று சண்டையிட்டுள்ளார். அதன்பின்னர் மாலை சூர்யா தனது நண்பர்கள் சிலருடன் முருகவேலின் வீட்டின் அருகே வந்தபோது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சூர்யாவை முருகவேல் கத்தியால் வெட்டியுள்ளார்.

இதனையடுத்து, இருதரப்பினரும் கத்தி, உருட்டுகட்டை உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து மோதிக்கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

பயங்கர ஆயுதங்களுடன் இருதரப்பினர் மோதல் - சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து, அதில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:இளைஞர்களை பீர் பாட்டிலால் தாக்கிய போதை ஆசாமிகள் - பகீர் சிசிடிவி காட்சிகள்

Last Updated : Oct 11, 2021, 6:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details