சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காசிமாயன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 15 மாநகராட்சியில் இதுவரை பெற்ற வரி தொடர்பான விவரங்களை வெளியிடுமாறு கேட்டிருந்தார். அதன்படி வரி தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வசூலிக்கப்படாமல் உள்ள ரூ.1552 கோடி சொத்து வரி - குடிநீர் வரி
தமிழ்நாட்டில் 13 மாநகராட்சிகளில் கடைசி மூன்று ஆண்டுகளில் 1552 கோடி ரூபாய் சொத்து வரி வசூல் செய்யபடாமல் உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
சொத்து வரி
- மொத்தம் வரி வசூல் செய்ய வேண்டிய தொகை 2 ஆயிரத்து 759 கோடி ரூபாய்
- மொத்தம் வசூல் செய்யப்பட்ட தொகை ஆயிரத்து 207 கோடி ரூபாய்
- மொத்தம் வசூல் செய்யப்படாமல் உள்ள தொகை 1552 கோடி ரூபாய்
காலி நில வரி - மொத்தம் வரி வசூல் செய்ய வேண்டிய தொகை 345 கோடி ரூபாய்
- மொத்தம் வசூல் செய்யப்பட்ட தொகை 74 கோடி ரூபாய்
- மொத்தம் வசூல் செய்யப்படாமல் உள்ள தொகை 271 கோடி ரூபாய்
குடிநீர் வரி
- மொத்தம் வரி வசூல் செய்ய வேண்டிய தொகை 802 கோடி ரூபாய்
- மொத்தம் வசூல் செய்யப்பட்ட தொகை 372 கோடி ரூபாய்
- மொத்தம் வசூல் செய்யப்படாமல் உள்ள தொகை 430 கோடி ரூபாய்
நிலத்தடி வடிகால் வரி - மொத்தம் வரி வசூல் செய்ய வேண்டிய தொகை 382 கோடி ரூபாய்
- மொத்தம் வசூல் செய்யப்பட்ட தொகை 86 கோடி ரூபாய்
- மொத்தம் வசூல் செய்யப்படாமல் உள்ள தொகை 296 கோடி ரூபாய்
தொழில் வரி - மொத்தம் வரி வசூல் செய்ய வேண்டிய தொகை 425 கோடி ரூபாய்
- மொத்தம் வசூல் செய்யப்பட்ட தொகை 226 கோடி ரூபாய்
- மொத்தம் வசூல் செய்யப்படாமல் உள்ள தொகை 199 கோடி ரூபாய்
வரி அல்லாத வருவாய்
- மொத்தம் வரி வசூல் செய்ய வேண்டிய தொகை 909 கோடி ரூபாய்
- மொத்தம் வசூல் செய்யப்பட்ட தொகை 230 கோடி ரூபாய்
- மொத்தம் வசூல் செய்யப்படாமல் உள்ள தொகை 679 கோடி ரூபாய்
SUC tax - மொத்தம் வரி வசூல் செய்ய வேண்டிய தொகை 229 கோடி ரூபாய்
- மொத்தம் வசூல் செய்யப்பட்ட தொகை 137 கோடி ரூபாய்
- மொத்தம் வசூல் செய்யப்படாமல் உள்ள தொகை 92 கோடி ரூபாய்