சென்னைதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 6) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் டிஜிபி சைலேந்திரபாபு, சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர், உள்துறை செயலாளர் எஸ் கே பிரபாகர், காவல்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் - தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம்.
மே 9, 10 ஆம் தேதிகளில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறவுள்ள நிலையில், அதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோனையில் ஈடுபட்டார்.
![முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் முதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15210115-thumbnail-3x2-asmbly.jpg)
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம்.
விசாரணைக் கைதி விக்னேஷ் வழக்கு தொடர்பாக ஆய்வாளர் உள்பட ஒன்பது போலீஸாரிடம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் டிஜிபி ஷகீல் அக்தர், சைலேந்திரபாபு இருவரிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:ஆதீனம் விவகாரத்தில் அரசியல் செய்பவர்கள் அரசியல் செய்யட்டும் - வைகோ