தமிழ்நாட்டில் இதுவரை மூன்று கோடியே 73 லட்சத்து 34 ஆயிரத்து 452 பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 25 லட்சத்து 69 ஆயிரத்து 398 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்கள் என்பது கண்டறியப்பட்டது. நேற்று (ஆக. 5) ஒரேநாளில் மட்டும் 1,997 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 33 பேர் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
அண்மையில் வெளியான தகவலின்படி, ஈரோடு உள்பட 21 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மு.க. ஸ்டாலின் தலைமையில் மருத்துவ வல்லுநர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்களுடன் இன்று (ஆகஸ்ட் 6) நண்பகல் 12.30 மணிக்கு சென்னை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.