தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிப்ஸ் சாப்பிட்டு, டயட் கோக் குடித்த வருவாய் அலுவலக ஊழியர் மரணம் - சென்னை வருவாய் அலுவலக ஊழியர் உயிரிழப்பு

சென்னையில் சிப்ஸ் சாப்பிட்டு, டயட் கோக் குடித்த வருவாய் அலுவலக ஊழியர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

சிப்ஸ், டயட் கோக் சாப்பிட்ட வருவாய் அலுவலக ஊழியர் உயிரிழப்பு
சிப்ஸ், டயட் கோக் சாப்பிட்ட வருவாய் அலுவலக ஊழியர் உயிரிழப்பு

By

Published : Apr 10, 2022, 12:39 PM IST

சென்னை: வேளச்சேரியை சேர்ந்த சதீஷ்(25) சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்துவந்தார். இவர் நேற்று (ஏப். 9) கிழக்கு கடற்கரை சாலை அக்கரை அருகே நண்பர்களுடன் இறகுபந்து விளையாடினார்.

இதையடுத்து சதீஷ் நண்பர்களுடன் அங்குள்ள கடையில் சிப்ஸ் வாங்கி சாப்பிட்டுவிட்டு, டயட் கோக் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு அவருக்கு லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமாகவே நண்பர்கள் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிரிழந்தாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் தரப்பில், குளிர்பானம் குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா? என்று உடற்கூராய்வின் முடிவுகள் வந்தபின்னரே தெரியவரும். பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 'எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க'...அட்டவணை போட்டு லேப்டாப் திருடிய பட்டதாரி - சுவாரஸ்யமான பின்னணி!

ABOUT THE AUTHOR

...view details