இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பணி ஓய்வு வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது, ஓய்வு பெறக்கூடிய ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதுதான்.
ஆனால், அரசு ஏற்கனவே ஆயிரக்கணக்கான பணியிடங்களை குறைத்திருக்கிறது. ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. பணி நிரவல் என்ற பெயரில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பணி ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு உரிமையை மறுத்திருக்கிறது.
லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்காகவும், அரசுப் பணிகளுக்காகவும் கனவுகளுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்று பணி நீட்டிப்பு வழங்குவது அவர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதாகவே அமையும்.
அரசு ஊழியர்கள் மீது உண்மையிலேயே அரசுக்கு அக்கறை இருக்குமானால், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் போராடியபோது, பறிக்கப்பட்ட உரிமைகளையும், அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளையும் ரத்து செய்து, தற்போது பறிக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ரத்து, அகவிலைப்படி உயர்வு ரத்து ஆகிய உரிமைகளை வழங்கவும் வேண்டும் “ எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வீட்டில் 24 மணி நேரத்திற்கு மேல் மருத்துவக் கழிவை வைக்கக்கூடாது