சென்னை:அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது வந்துள்ள பல்வேறு புகார்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மூன்று மாதங்களுக்குள் புகார்களை விசாரணை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என உயர் கல்வித் துறை செயலாளர் அபூர்வா அரசாணை வெளியிட்டுள்ளார்.
துணை வேந்தர் சூரப்பா சர்ச்சை: நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழு! - anna university vice chancellor soorappa issue
11:31 November 13
அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, அதுகுறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தனி நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் நியமனங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், அரியர் விவகாரம், தேர்வுத் துறையில் மறு மதிப்பீட்டிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது உள்ளிட்ட பல விவகாரங்களில் உள்நோக்கத்துடன் சூரப்பா செயல்பட்டு வந்ததாக புகார்கள் வந்ததால், இந்த விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசு அமைத்திருக்கும் இந்தக் குழு, அரசுக்கு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.