தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: 10 ஆவது முறையாக மேலும்  6 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு! - ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கால அவகாசம் நீட்டிப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு 10 ஆவது முறையாக, மேலும் 6 மாதங்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்
ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்

By

Published : Jan 26, 2021, 4:50 AM IST

சென்னை:முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் ஜனவரி 24 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது 10 ஆவது முறையாக மேலும் 6 மாதங்கள் காலம் அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில். கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 3 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.

இதையடுத்து ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், போயஸ் தோட்டத்தின் பணியாளர்கள் என்று 154 பேரிடம் ஆணையம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், மருத்துவ குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று அப்பலோ நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில், 90 விழுக்காடு விசாரணையை ஆணையம் முடித்துள்ளதால் அப்பல்லோ நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பல்லோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த மேல் முறையீட்டு வழக்கில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு 9 ஆவது முறையாக கொடுக்கப்பட்ட 3 மாத கால அவகாசம் நேற்றுடன் (ஜன.,24) முடிவடைந்தது.

இதனால் ஆணையத்தின் கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியதை தொடர்ந்து கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்திரவிட்டுள்ளது.

கடந்த முறை கால அவகாசத்திற்கான நீட்டிப்பு கடிதத்தில், உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தாமதம் ஆவதை அரசு வழக்கறிஞர்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டிய நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் அரசுக்கு சுட்டிக்காட்டி இருந்தது.

ஆணையத்தின் விசாரணைக்கான இடைக்கால தடை மீதான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது; அதிமுகவின் ஆட்சியும் முடியவடையவுள்ளது. ஜெயலலிதாவுடைய மரணத்தின் மர்மம் விலகவில்லை. விசாரணை ஆணைத்தில் இறுதியாக, கடந்த 2019 ஜனவரி 22 ஆம் தேதி தம்பிதுரையிடம் நேரடியாக விசாரணை நடைபெற்றது. இதன் பின்னர் விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதித்ததால், கடந்த 23 மாதங்களாக யாரிடமும் விசாரணை நடைபெறாமலே தமிழ்நாடு அரசு கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து வருகிறது.

இதையும் படிங்க:மருத்துவர் உமாசங்கர் வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி!

ABOUT THE AUTHOR

...view details