நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராய ஒய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் 3ஆவது கூட்டம் இன்று(ஜூன்.28) சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், ஏ.கே. ராஜன், மருத்துவத்துறைச் சிறப்பு செயலர் செந்தில்குமார், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா, மருத்துவர்கள் ரவீந்திரநாத், ஜவஹர் நேசன், மருத்துவ கல்வித் துறை இயக்குநர் நாராயண பாபு, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் வசந்தாமணி உள்ளிடோர் கலந்துகொண்டனர்.
ஆதரவு, எதிர்ப்பு என 86,342 மனுக்கள்
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஏ.கே. ராஜன், "நீட் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான மனுக்கள் வந்துள்ளன. ஆதரவு, எதிர்ப்பு என்று இரண்டு தரப்பிலும் கருத்துகள் உள்ளன. இதுவரை 86,342 பேர் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. எந்த கருத்துகள் அதிகமாக வந்துள்ளன என்று தற்போது கூற முடியாது.