சென்னை:கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
புதிய விதிமுறைகள் நாளை ( ஏப்.10) முதல் அமலுக்கு வருகின்றன. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கோயம்பேடு சந்தையில் சில்லரை விற்பனைக்கு தடைவிதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு சிறுவியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய கோயம்பேடு மொத்த வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர், " கடந்த முறை கரோனா பரவலில் அதிகம் பாதிக்கப்பட்டது சிறு வியாபாரிகள் தான். கோயம்பேடு சந்தை திருமழிசைக்கு மாற்றப்பட்ட போது, சிறுவியாபாரிகளுக்கு கடைகளே ஒதுக்கப்படவில்லை.
அந்த பாதிப்புகளில் இருந்து எல்லாம் இப்பொழுது தான் மீண்டு வந்து கொண்டு இருக்கிறோம். தற்போதைய இந்த அறிவிப்பு இடி விழுந்ததை போல் உள்ளது" என்றார். தொடர்ந்து "50 விழுக்காடு கடைகளை சுழற்சி முறையில் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கையும் விடுத்தார்.
இதையும் படிங்க:திருவிழாக்கள், மதம் சார்ந்த நிகழ்வுகளுக்குத் தடை - தமிழ்நாடு அரசு