தமிழ்நாடு

tamil nadu

'சொத்துக்களை சட்டவிரோதமாக பதிவுசெய்வதை தடுப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்க'

By

Published : Jun 19, 2021, 3:34 PM IST

சொத்துக்கள் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்கள் பெயரில் பதிவுசெய்வதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai high court
chennai high court

சென்னை: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா செட்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள தனது சொத்து, வேறு ஒருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பான விற்பனை பத்திரத்தை ரத்து செய்ய மரக்காணம் சார் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி, நில உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்துக்களின் உண்மையான உரிமையாளர்கள் தவிர, மூன்றாம் நபர்கள் எவரேனும் மோசடியாக சொத்துக்களை தங்கள் பெயரில் பதிவுசெய்யவில்லை என்பதை உறுதிசெய்ய, உரிய நடைமுறைகளை பதிவுத்துறை ஏற்படுத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.


பதிவுத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, விற்பனை பத்திரத்தை ரத்துசெய்வது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தையே அணுக முடியும் எனவும், சொத்துக்கள் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்கள் பெயரில் பதிவுசெய்வதை தடுக்கும் வகையில் முந்தைய வில்லங்கத்தை சரிபார்க்கும் வசதியை ஏற்படுத்த முடியுமா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பதிவாளர், சார் பதிவாளர் அலுவலகங்களில், சொத்துக்கள் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்கள் பெயரில் பதிவுசெய்வதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details