இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில், ஈரோடு மாவட்டத்தில் பெரும்பள்ள ஓடை 23 கிலோமீட்டர் தூரம் ஓடுவதாகவும், விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாகவும் திகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஓடையின் அருகில் எவ்வித கட்டுமானங்களும் இருக்க கூடாது என்பதை உறுதி செய்யவும், ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்ற உத்தரவிட்டதன் அடிப்படையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், பெரும்பள்ள ஓடையின் இரு புறமும் சுவர் எழுப்ப அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் ஓடையின் அகலம் சுருங்கி, அதில் ஓடும் தண்ணீர் ஊருக்குள் புகுவதற்கான அபாயம் உள்ளது என அச்சம் தெரிவித்துள்ளனர்.