தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு - desalination project

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்த தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தத்தைப் பதிவுசெய்ய ரூ. 26.80 கோடியில் பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்த உத்தரவை, ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்:
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்:

By

Published : Aug 30, 2021, 2:10 PM IST

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்த தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தத்தைப் பதிவுசெய்ய ரூ. 26.80 கோடியில் பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னையைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல்செய்துள்ளார்.

சென்னை நகர மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைப் போக்க, நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் இரண்டாவது அலகு அமைக்க முடிவெடுக்கப்பட்டு ஸ்பெயின், ஐக்கிய அரேபிய நாட்டு நிறுவனங்களின் கூட்டு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

  • ஜெர்மனி வங்கி கடனுதவியுடன் ஆயிரத்து 259 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

திட்டம் தொடர்பாக கூட்டு நிறுவனங்களின் ஒப்பந்தத்தை பதிவுத் துறையில் பதிவுசெய்ய வேண்டும்.

  • இந்நிலையில், ஒப்பந்தத்தைப் பதிவுசெய்வதற்கான கட்டணம் 26 கோடியே 80 லட்சம் ரூபாய் பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்து, 2020 அக்டோபரில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னையைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், "திட்டத்தைச் செயல்படுத்தும் கூட்டு நிறுவனங்களின் ஒப்பந்தத்தைப் பதிவுசெய்வது கட்டாயம். பதிவுக் கட்டணம், திட்டத்தின் நிதியுடன் சேர்ந்ததல்ல என்பதால், கட்டண விலக்கு வழங்கியது சட்டவிரோதமானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்துள்ளது.

இதையும் படிங்க: 'பள்ளி-கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு?'

ABOUT THE AUTHOR

...view details