இது தொடர்பாக சென்னை நகர தெற்கு வட்டார அஞ்சலகங்களின் மூத்த கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தற்போது பழைய பல்லாவரம் அஞ்சலகம் (600117), கிருஷ்ணா நகர் முக்கிய சாலை, விஷால் நகர் ஆகிய பகுதிகளின் அஞ்சல் விநியோகப் பணிகளை கவனித்து வருகிறது.
பழைய பல்லாவரம் அஞ்சலகப் பகுதிகள் மறுசீரமைப்பு! - பழைய பல்லாவரம் அஞ்சலகம்
சென்னை: பழைய பல்லாவரம் அஞ்சலகத்தின் சில விநியோகப் பகுதிகளை மடிப்பாக்கம் அஞ்சலகத்திற்கு அஞ்சல்துறை மாற்றியமைத்துள்ளது.
department
இந்நிலையில், இம்மாதம் 8 ஆம் தேதி முதல் இப்பகுதிகளின் அஞ்சல் விநியோகப் பணிகள், மடிப்பாக்கம் அஞ்சலகத்திற்கு (600091) மாற்றப்பட உள்ளன. எனவே இப்பகுதிகளில் வசிப்பவர்கள் இனி ’600091’ என்ற பின்கோடைப் பயன்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல் வீரன் சிலை கண்டுபிடிப்பு!