கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது குறிப்பிட்ட சில ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. இதற்கு இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
இந்த நிலையில், பயணிகள் சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்ய ஏதுவாக, தற்போது இயக்கப்படும் ரயில்கள் மற்றும் ஜுன் 1 முதல் இயக்கப்படவிருக்கும் ரயில்களுக்கான முன்பதிவு இன்று (22-05-2020) காலை 8 மணி முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொடங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக குறைந்தபட்சம் இரண்டு டிக்கெட் கவுண்டர்கள் செயல்படும்.