கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக்கூலிகள் வேலைவாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் உற்பத்தியை மேற்கொள்ள முடியாமல் தவித்துவருகின்றன.
இதனால், வீடுகள், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என வழக்குரைஞர் ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், சொத்து வரி, குடிநீர் கட்டணம், விவசாயக் கடன் தவணைகள் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணங்களை மே 6ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.