சென்னை: விநாயகர் சதுர்த்தி வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. "பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்" மூலம் விநாயகர் சிலைகள் தயாரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் "பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்" இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறதா என்பதை தனிக்குழுவை அமைத்து காவல்துறை கண்காணிக்க வேண்டும் என திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் விடுதலை கழக சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, விநாயகர் சதுர்த்தியின்போது இந்து அமைப்புகள் நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவை மீறி தொடர்ந்து தடை செய்யப்பட்ட "பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்" கொண்டு விநாயகர் சிலைகளை உருவாக்குவதையும், பின் அதை நீர் நிலைகளில் கரைத்து நீர்வாழ் உயிரினங்களுக்கும், பொதுமக்களுக்கும் ஊறு விளைவிக்கும் செயல்களை மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.