தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை - வீரப்பன்

அதிமுக (ADMK) ஆட்சியில் சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது தமிழ்நாடு-கர்நாடக கூட்டு அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பிலிருந்து சென்னை தலைமைச் செயலகத்தில் மனு வழங்கினர்.

தேடுதல் வேட்டை
தேடுதல் வேட்டை

By

Published : Nov 20, 2021, 8:00 PM IST

சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அப்பகுதியில் இருந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகினர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது வரை நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் பிரிவான இந்திய மாதர் தேசிய சம்மேளன தலைவி ஆனி ராஜா ஆகியோர் இணைந்து தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் பிரபாகரன் ஆகியோரை நேரில் சந்தித்து தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சுமார் 7.5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

பின்னர், பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பிலிருந்து முருகேசன் என்பவர், “தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை பெற்றுக்கொண்ட தலைமைச் செயலாளர் கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் கலந்து பேசி உடனடியாக இதற்கான தீர்வை பெற்று தருவதாக உறுதி அளித்ததாக” கூறினார்.

அடுத்ததாக பேசிய ஆனி ராஜா, “தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission) இடைக்கால நிவாரணம் அளித்திருந்தது. சித்ரவதைக்கு காரணமாக இருந்த காவல்துறையினர் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சித்ரவதை, பாலியல் வன்கொடுமை, கொலை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் சித்ரவதைக்கு காரணமான காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேசினார். உரிய நிவாரணம் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Viluppuram Floods - தளவானூரில் 6 கிலோமீட்டர் நடந்து சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details