தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கருணாநிதி பிறந்தநாளை கணினி அறிவியல் பாடம் உதித்த நாளாக அறிவிக்கக் கோரிக்கை - மாநிலங்களுக்கு முன்னோடியான தமிழ்நாடு

கருணாநிதியின் பிறந்த நாளை, அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் உதித்த நாளாகக் கொண்டாடுவோம் என கணினி ஆசிரியர் சங்கத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருணாநிதி பிறந்தநாள்
கருணாநிதி பிறந்தநாள்

By

Published : Jun 3, 2022, 6:21 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில், கருணாநிதியின் பிறந்த நாளை கணினி அறிவியல் பாடம் உதித்த நாளாகக் கொண்டாட ஆவண செய்யவேண்டும் என்று தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் குமரேசன் கூறும்போது, அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்தை கற்க வேண்டும் என்ற நோக்கில் முதன்முதலாக அரசுப் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடத்தைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் தனி முத்திரைப் பதித்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

மேலும், 2009ஆம் ஆண்டு சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடத்தை 6 ஆம் வகுப்பிலிருந்தே அறிமுகம் செய்தார். கணினி அறிவியல் பாடம் என்பது காலத்தின் கட்டாயம்; இதனை உணர்ந்து பல மாநிலங்களுக்கு முன்னோடியாக கணினி அறிவியல் பாடத்தில் நன்கு கற்று தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் 2011ஆம் ஆண்டில் இதனை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

ஆனால், ஆட்சி மாற்றத்தின் காரணமாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டுவந்த கணினி அறிவியல் பாடமும் அதற்கான புத்தகங்களும் இன்றுவரை 10 ஆண்டுகளாக முடங்கியுள்ளது. அவர் கொண்டு வந்த உயரிய பாடத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்றி 9 ஆம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன. தமிழ்நாடு கலைத்திட்டத்தில் ஐந்து பாடம் என்ற நிலையை மாற்றி ஆறாவது பாடமாக கணினி அறிவியல் பாடத்தை கொண்டுவந்தார். பல மாநிலங்கள், இதனை பிரதானப் பாடங்களாக மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகின்றனர். இந்தப் பெருமை எல்லாம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மட்டுமே சேரும்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மாற்ற நினைத்த, தமிழ்நாடு அரசு பள்ளியில் கணினி அறிவியல் பாடம் என்ற நிலை தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே நடைமுறைப்படுத்தி கருணாநிதியின் கனவுக் கல்வியான கணினி கல்வியை அரசு பள்ளிகளுக்கு கொண்டுவந்து அரசு பள்ளியை மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளியில் உருவாக்கித் தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவர் பிறந்தநாளை அரசு பள்ளிகளுக்கான கணினி அறிவியல் நாளாக நாம் அனைவரும் கொண்டாடுவோம்' எனத் தெரிவித்துள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details