தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை விமான நிலையத்தில் 22 மாதங்களாக மூடப்பட்டிருந்த நுழைவு வாயில் திறப்பு - சென்னை விமானநிலையம்

சென்னை விமான நிலையத்தில் 22 மாதங்களுக்குப் பின் தாம்பரம் பகுதியிலிருந்து வாகனங்கள் வரும் நுழைவு வாயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை சர்வதேச மீனம்பாக்கம் விமான நிலையம்
சென்னை சர்வதேச மீனம்பாக்கம் விமான நிலையம்

By

Published : Dec 16, 2021, 10:37 AM IST

சென்னை:சென்னை விமான நிலையத்திற்கு கிண்டி வழியாகச் செல்பவர்கள் பிரதான நுழைவு வாயில் வழியாக அனுமதிக்கப்பட்டனர். தாம்பரம், பல்லாவரம் வழியாக வருபவர்களுக்கு விமான நிலைய காவல் நிலையம் அருகே உள்ள நுழைவு வாயில் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் திறக்கப்பட்ட நுழைவு வாயில்

கரோனா தொற்றால் அனுமதியில்லை

2020ம் ஆண்டு மாா்ச் மாதம் கரோனா தொற்று காரணமாக தாம்பரம் பகுதியிலிருந்து வரக்கூடிய நுழைய வாயில் மூடப்பட்டது. இதனால் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் பிரதான நுழைவு வாயில் வழியாக வந்துசெல்ல வேண்டும்.

இதனால் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் சுமாா் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு வரும் நிலை ஏற்பட்டது. உள்நாட்டு விமான நிலையத்தை கடந்து வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலைய காவல் நிலையம் அருகே மூடிவைக்கப்பட்ட நுழைவு வாயிலைத் திறக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கைவைத்தனர்.

மீண்டும் பாதை திறப்பு

கடந்த 22 மாதங்களாக மூடிவைக்கப்பட்டிருந்த காவல் நிலையம் அருகே உள்ள நுழைவு வாயில் வாகனங்களை விமான நிலைய ஆணையரகம் திறக்க அனுமதித்தது. இதனால் தாம்பரம் பகுதியிலிருந்து விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் காவல் நிலையம் நுழைவு வாயில் வழியாக பன்னாட்டு - உள்நாட்டு முனையங்களுக்குச் செல்லலாம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 8 பேருக்கு உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று? - அமைச்சர் மா.சு

ABOUT THE AUTHOR

...view details