சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றை திறந்து வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் எட்டாம் வகுப்பு பள்ளிகள் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று(செப்.14) நடைபெற்று வருகிறது.
8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: இறுதி முடிவு - ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்த இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு
இந்தக் கூட்டத்தில் நான் மாலையில் கலந்துகொள்ள உள்ளேன். இதையடுத்து பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார். ஏற்கனவே ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பட்டுள்ளதும், ஆங்காங்கே சில பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என கரோனா தொற்று உறுதியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது - சுகாதாரத் துறை செயலாளர் தகவல்