தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மயிலாடுதுறை ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு - Department of Hindu Religious Affairs

மயிலாடுதுறை: தரங்கம்பாடி, நல்லாடை என்னுமிடத்தில் உள்ள சுந்தரநாயகி சமேத ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயிலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்க, இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறை ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை
மயிலாடுதுறை ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை

By

Published : Mar 27, 2021, 7:40 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, நல்லாடை என்னுமிடத்தில் உள்ள பரணி நட்சத்திர பரிகார கோயிலான சுந்தரநாயகி சமேத ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில் சிதிலமடைந்திருப்பதால், சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்த, இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிடக்கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் பதிலளித்த கோயில் செயல் அலுவலர், கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள மாவட்ட, மாநில குழுக்களின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாகவும், உயர் நீதிமன்ற குழுவின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாகவும், உயர் நீதிமன்ற குழுவின் ஒப்புதல் கிடைத்தவுடன் சீரமைப்புப் பணிகள் துவங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதைப் பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 12 வாரங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்பிக்கைத் தெரிவித்து வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: 'ஜெஷோரேஸ்வரி, ஓரகண்டி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வழிபாடு! '

ABOUT THE AUTHOR

...view details