கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஜெயவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்குதாங்கல் கிராமத்தில் புறம்போக்காக வகைபடுத்தபட்டுள்ள மயானத்தின் ஒரு பகுதியை கிராம மக்கள் சிலர் ஆக்கிரமித்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடந் தார் சாலை அமைக்க முயற்சி செய்து வருவதால், மயானத்தின் பரப்பளவு குறைந்து, சடலத்தை புதைக்க கிராம மக்கள் சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல, 2.13 ஹெக்டேர் பரப்பளவுள்ள குளம் என வகைப்படுத்தப்பட்டுள்ள நீர் நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதால், மழைக்காலத்தில் நீர் நிலைகளில் தண்ணீர், மழைநீர் வீணாவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, செயல் அலுவலரிடம் கேள்வி எழுப்பியபோது, சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டதால், வேறு இடத்தைத் தேட முடியாது என்பதால், தார் சாலை அமைக்க முடிவு செய்துள்ளாதாக தெரிவித்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நீர்நிலை மற்றும் மயான புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்".