சென்னை: ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் சிவகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் வி.எம்.வேலுமணி, எஸ்.சௌந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், சிவகுமாரின் மனைவி திருமண உறவில் இருக்கும் போதே அவர் கட்டிய தாலியை கழட்டியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து பதிலளித்த எதிர் மனுதாரர், இந்து திருமணச் சட்டத்தின் 7வது பிரிவைக் குறிப்பிட்டு, தாலி கட்டுவது அவசியமில்லை என்றும், அது உண்மை என்று கருதி அதை அகற்றுவது, திருமண பந்தத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஆனால், இந்தியாவில் தாலி ஒரு முக்கியமான திருமணச் சடங்குகளில் இன்றியமையாத சடங்கு என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும் எதிர் மனுதாரரே அவர் தாலியை கழட்டியதையும், வங்கியில் வைத்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.