சென்னை:தமிழ்நாடு முழுவதும் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் என். சதீஷ்குமார், என். மாலா ஆகியோர் அடங்கிய முழு அமர்வில் இந்த வழக்கு மீண்டும் இன்று (ஜூலை 14) விசாரணைக்கு வந்தது.
சீமைக் கருவேல உள்ளிட்ட அன்னிய மரங்களை அகற்றி, சுற்றுச்சூழலை மீட்டெடுப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணை பிறப்பித்துள்ளது என்று கூறி ஜூலை 13 தேதியிட்ட அரசாணையை தாக்கல் செய்தார்.
சீமைக் கருவேல மரங்களை இயந்திரம் மூலமும், ரசாயன முறை மூலமும் அகற்றக்கூடிய பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன என்றும், முன்னேற்றம் என்பதை காகிதத்தில் மட்டுமல்லாமல், ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். அதனால் அரசாணை மற்றும் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.