சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இவ்வார்டுகளில் அனைத்திலும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய பூங்காக்கள், பள்ளி வளாகங்கள், பேருந்து நிறுத்தங்கள், மார்க்கெட் பகுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்றவை உள்ளன.
இவ்வமைவிடங்களில் தீவிர தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் வாரத்தின் சனிக்கிழமைகளில் நடைபெறும். இம்முகாம்கள் அனைத்தும் தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், மக்கள் பிரிதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புகளுடன் நடைபெறும்.
இந்நிலையில், நேற்று (ஆக.13) பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 200 வார்டுகளிலும் தீவிர தூய்மைப்பணி பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது. நேற்றைய தீவிர தூய்மைப்பணியில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பரப்பலகைகள் மற்றும் பேனர்கள் அகற்ற முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.