தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வந்த நிலையில், ஏராளமானோர் இதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பல குழந்தைகளும் தங்கள் பெற்றோரை இந்த அலையில் இழந்துள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு நிவாரணம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே 29ஆம் தேதி கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணத் தொகை ஐந்து லட்சம் மற்றும் பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: நிவாரணம் வழங்க வழிகாட்டுதல் குழு
சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க வழிகாட்டுதல் குழு அமைத்து, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்
அதனைத் தொடர்ந்து பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணத் திட்டங்களை செயல்படுத்த கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.