சென்னை: TN Final Voter List Released: 2022ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.
"தமிழ்நாட்டில் மொத்தம் 6,36,25,813 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,12,26,759; பெண் வாக்காளர்கள் 3,23,91,250 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,804 பேர் உள்ளனர்.
ஜனவரி 1, 2022 யை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்க முறை திருத்தம், 01.11.2021 அன்று வரைவுப் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் கடந்த 2021 ஆண்டு, நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து நவம்பர் 30ஆம் தேதிவரை பெறப்பட்டன.
வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள்
மேற்கண்ட சிறப்புச் சுருக்க முறை திருத்தக் காலத்தின்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 10,36,917 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் 10,17,456 விண்ணப்பங்கள் (ஆண்கள் 4,56,071 ; பெண்கள் 5,60,735 ; மூன்றாம் பாலினத்தவர் 650) ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பெயர் நீக்கலுக்காக 2,96,107 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 2,86,174 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி (80,018), இறப்பு (1,90,470) மற்றும் இரட்டைப் பதிவு (15,686) ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன.
பதிவுகளில் திருத்தங்கள் செய்யக்கோரி 1,70,271 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் 1,61,461 (ஆண்கள் 83,907 ; பெண்கள் 77,479 ; மூன்றாம் பாலினத்தவர் 75) ஏற்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதி வாக்காளர் பட்டியல்
ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யக்கோரி 1,23,348 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 1,20,338 (ஆண்கள் 56,421 ; பெண்கள் 63,899; மூன்றாம் பாலினத்தவர் 18) ஏற்கப்பட்டு உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
2022-ஆம் ஆண்டு சிறப்புச் சுருக்க முறைத் திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி தமிழ்நாட்டில் 6,36,25,813 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,12,26,759; பெண் வாக்காளர்கள் 3,23,91,250 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,804பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதிக வாக்காளர் கொண்ட தொகுதி