சென்னை: 2020-2021ஆம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பு படித்த பள்ளி மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை இன்று (ஜூலை 19) காலை 11 மணிக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.
பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.
பள்ளி மாணவர்கள் ஜூலை 22 ஆம் தேதி அன்று காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்கள் வாயிலாக தங்களது பதிவெண், பிறந்த தேதியினை பதிவு செய்து, தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:தானிஷ் சித்திக் உடல் ஜாமியா பல்கலைக்கழகத்தில் அடக்கம்