தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு குறித்து அவதூறு: வழக்கை ரத்து செய்யக்கோரிய சீமானின் மனு தள்ளுபடி! - NTK Party Coordinator Seaman

சென்னை: தமிழ்நாடு அரசு குறித்து அவதூறாகப் பேசியதாகத் தன்மீது தொடரப்பட்ட வழக்கை ரத்துசெய்யும்படி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல்செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது.

சீமான் தாக்கல்செய்த மனுவை தள்ளுபடிசெய்த உயர் நீதிமன்றம்
சீமான் தாக்கல்செய்த மனுவை தள்ளுபடிசெய்த உயர் நீதிமன்றம்

By

Published : Mar 23, 2021, 8:19 PM IST

2019ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் விமர்சித்துப் பேசியதாகவும், வேண்டுமென்றே களங்கம் கற்பிக்கும் நோக்கில் அவதூறாகப் பேசியதாகவும், அவதூறு சட்டப்பிரிவுகளின்கீழ் அவரைத் தண்டிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில், நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல்செய்திருந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனு, நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முகமது ரியாஸ், ஏற்கனவே இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி சீமான், உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த வழக்கு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், மீண்டும் அதே கோரிக்கையுடன் தொடர்ந்துள்ள இந்த வழக்கையும் தள்ளுபடிசெய்ய வேண்டுமென வாதிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம்

வழக்கை தள்ளுபடி

அரசுத் தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி பாரதிதாசன், அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல்செய்த மனுவைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:'கோவை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!'

ABOUT THE AUTHOR

...view details