தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சமையல் எரிவாயு முகவரையும் மாற்றி கொள்ளும் வசதி: கோயமுத்தூர் உள்ளிட்ட நகரங்களில் விரைவில் அறிமுகம்! - LPG

டெல்லி: நுகர்வோர் விரும்பும் எந்த சமையல் எரிவாயு முகவரிடமும் சேவையை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. முதல்கட்டமாக, கோயம்புத்தூர், சண்டிகர் உள்ளிட்ட நகரங்களில் விரைவில் அமலுக்கு வருகிறது.

சமையல் எரிவாயு
LPG

By

Published : Jun 10, 2021, 7:17 PM IST

குறைந்த விலையில் எரிசக்தியை அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும் என்ற பிரதமரின் லட்சியத்தைத் தொடர்ந்தும், சமையல் எரிவாயு நுகர்வோருக்கு மேலும் அதிகாரமளிக்கும் நோக்குடனும், நுகர்வோர் விரும்பும் எந்த சமையல் எரிவாயு முகவரிடமும், சேவையை மாற்றிக் கொள்ளும் வசதியை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தங்கள் பகுதியிலுள்ள குறிப்பிட்ட எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனத்துடன் இணைந்துள்ள எந்த ஒரு விநியோகஸ்தரிடம் இருந்தும் சேவையை பெறும் வசதியை நுகர்வோர் தேர்ந்தெடுக்கலாம்.

கோயம்புத்தூர், சண்டிகர், குர்கான், புனே மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களில் முதலில் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. தாங்கள் சேவை பெறும் எண்ணெய் நிறுவனங்களின் இணையதளங்கள் மற்றும் கைபேசி செயலிகள் மூலம் நுகர்வோர்கள் இந்த சேவையை பெறலாம். இந்த இலவச வசதியின் மூலம் வீட்டிலிருந்தவாறே தங்களது சமையல் எரிவாயு விநியோகஸ்தரை நுகர்வோர்கள் மாற்றிக்கொள்ள முடியும்.

நடப்பாண்டு மே மாதத்தில் 55,759 விநியோகஸ்தர் மாற்றல் கோரிக்கைகள், எண்ணெய் நிறுவனங்களால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details