சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தாக்கல் செய்த சட்ட முன்வடிவில், கூட்டுறவு சங்கங்களில் நடைபெறக்கூடிய முறைகேடுகள் மற்றும் கையாடல் முறைகேடுகளை விரைந்து வெளிக்கொணர வகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி கூட்டுறவு சங்க முறைகேடுகள் குறித்து நடைபெறக்கூடிய முதல் கட்ட விசாரணையின் கால அளவு மூன்று மாதத்தில் இருந்து ஒரு மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்க முறைகேடுகளை விசாரிக்கும் கால அளவு குறைப்பு! - கூட்டுறவு சங்க முறைகேடுகளை விரைந்து தீர்வு காண விசாரணை கால அளவு மூன்று மாதமாக குறைப்பு
சென்னை: கூட்டுறவு சங்க முறைகேடுகளை மூன்று மாத காலத்திற்குள் விசாரித்து முடிக்க வகை செய்யும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
sellur raju
மேலும், முதல்கட்ட விசாரணை அறிக்கையின் பேரில் விசாரணை நடத்தக்கூடிய உயர் அதிகாரிகளின் விசாரணை கால அளவு ஆறு மாதத்திலிருந்து மூன்று மாத காலமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டுறவு சங்கங்களில் நடைபெறக்கூடிய முறைகேடுகளை விரைந்து வெளிக்கொணரவும், அதில் ஏற்படும் இழப்புகளை வசூலிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் வகை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அங்கன்வாடி மையங்கள் விரைவில் சீரமைப்பு - அமைச்சர் சரோஜா தகவல்!