சென்னை:கரோனா தொற்றை உறுதி செய்வதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணத்தை இன்று (மார்ச் 17) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை குறைத்து அறிவித்துள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில், 'முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் கரோனாவை உறுதிபடுத்தும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணம் ரூ.400-லிருந்து 250ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், குழு மாதிரிகளுக்கான கட்டணம் 150 ரூபாயில் இருந்து ரூ.75 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.