இந்திய மருத்துவ முறை படிப்புகளான ஆயுர்வேதா, யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற படிப்புகளில், 278 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்களை குறைக்க உத்தரவிடக் கோரி, சென்னையை சேர்ந்த மாணவர் நவீன் பாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு 394 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளதாகவும், 555 மாணவர்கள் விண்ணப்பித்த போதும், 116 பேருக்கு மட்டுமே சேர்க்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.