தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு..? : தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரை - தமிழ்நாடு

சென்னை: தமிழ்நாட்டில் பத்து வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளார்.

Sathyapradha

By

Published : Apr 22, 2019, 10:28 AM IST

தமிழ்நாட்டில் இருக்கும் 39 மக்களவைத் தொகுதிகளில் வேலூர் தவிர 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் கடந்த 18ஆம் தேதி நடந்து முடிந்தது. ஆனால் வாக்குப்பதிவின் போது ஒரு சில இடங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து முறைகேடு புகார் தொடர்பாக வாக்குப்பதிவு மைய அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் 8, பூந்தமல்லியில் 1, கடலூரில் 1 என மொத்தம் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details