multi million dollar scam:மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் CPSC அறக்கட்டளையின் கீழ் 'People's Watch' என்ற தொண்டு நிறுவனமும் செயல்பட்டுவருகிறது. 1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் நன்கொடை, பல்வேறு வகையில் நன்கொடையாகக் கிடைக்கப்பெறும் நிதி ஆதாரங்களைக் கொண்டு குழந்தைகள், முதியவர்கள், ஹெச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எனப் பல்வேறு தரப்பினருக்கு காப்பகங்கள் வைத்து நடத்திவருகின்றனர்.
வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் அதற்குண்டான ஆவணங்களைக் காட்டி முறையாக உள் துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் Cpse அறக்கட்டளை முறையான அனுமதி பெறாமலும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டும் கோடிக்கணக்கில் வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக 2012, 2014ஆம் ஆண்டுகளில் ஆய்வுசெய்த உள் துறை அமைச்சக அலுவலர்கள் நன்கொடை பெற்றதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதையும், முறையான அனுமதி பெறாததையும் உறுதிசெய்து இதை சிபிஐ விசாரிக்கப் பரிந்துரைத்தது.