சென்னை திரு.வி.க. நகர் மண்டலத்திற்கு உள்பட்ட அயனாவரம் பகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் உதயகுமார், "100 விழுக்காடு விழிப்புணர்வை ஏற்படுத்த மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கையை எடுத்துவருகிறார்கள். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் தேவையின்றி வெளியே வராமல் இருப்பதை உறுதி செய்ய 2,000 தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர்.
திரு.வி.க.நகர் மண்டலத்தில் உள்ள 7.7 லட்சம் மக்களுக்கு முழுமையாக விழிப்புணர்வு பணிகள் சென்றடைவதைக் கண்காணிக்கிறோம். நோய்த் தொற்று இல்லாத மண்டலமாக திரு.வி.க. நகரை உருவாக்குவோம்.
சென்னையில் தனி மனித இடைவெளி என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும். அரசின் அறிவுரைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு வேண்டும். சென்னையில் 144 தடை உத்தரவு அமலில்தான் உள்ளது. சில தளர்வுகளை வழங்கியுள்ளோம். சென்னையில் கரோனாவை கட்டுப்படுத்த முதலமைச்சர் அதிக கவனம் கொடுக்கிறார்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரோனா சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், "சென்னையில் பொதுமக்கள் விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் காவல்துறை மூலம் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.