ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'இதுவே முதல்முறை; டெல்லியில் நடக்கும் பண்பு மாற்றம்' - ரவிக்குமார் எம்பி - ரவிக்குமார் எம்பி ட்வீட்

தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் டெல்லியில் பண்பு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என ரவிக்குமார் எம்பி ட்வீட் செய்துள்ளார்.

ரவிக்குமார் எம்பி ட்விட்டர் பதிவு
ரவிக்குமார் எம்பி ட்விட்டர் பதிவு
author img

By

Published : Jun 5, 2021, 10:27 AM IST

சுகாதாரத்தை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய அரசின் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியிருந்தார்.

இக்கடிதத்தின் நகலொன்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கும் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ஹர்ஷ்வர்தன் அலுவலகத்திலிருந்து பதில் வந்துள்ளதாக ரவிக்குமார் எம்பி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

in article image
ரவிக்குமார் எம்பி ட்விட்டர் பதிவு

அவரது ட்விட்டர் பதிவில், "சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் அலுவலகத்திலிருந்து நேற்று (ஜூன் 4) மாலை 4.35-க்கு போன் வந்தது. அவரது தனிச் செயலர் பேசினார், 'சுகாதாரச் சேவையை அடிப்படை உரிமை ஆக்க சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது.

அது தொடர்பாகப் பரிசீலித்துத் தங்களுக்கு விரைவில் தெரிவிக்கப்படும் என அமைச்சர் தங்களிடம் கூறும்படி சொன்னார்கள்’ என அவர் தெரிவித்தார்.

நான் எம்பி ஆகி இரண்டு ஆண்டு காலத்தில் கடிதம் கிடைத்ததை அமைச்சர் அலுவலகத்திலிருந்து போன் செய்து உறுதிப்படுத்துவது இதுவே முதல்முறை. தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் டெல்லியில் பண்பு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details