ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளைக் கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதில் மூன்று மாதங்களாக பொருள்கள் வாங்காமல் இருப்பவர்களின் கார்டுகள் முடக்கப்படும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில், ரேஷன் கடை தொடர்பான வழக்கு ஒன்றில் ஏராளமான ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அதனால், அம்மாநில அரசு மூன்று மாதங்கள் பயன்பாட்டில் இல்லாத கார்டுகளை முடக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.