Rasakannu wife Parvathi Ammal:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, சென்னை தலைமைச் செயலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம், ராசாக்கண்ணு மனைவி பார்வதி ஆகியோர் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய கே.பாலகிருஷ்ணன், 'மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்கள் முதலமைச்சரை சந்தித்தோம். 'ஜெய் பீம்' திரைப்பட களப்போராளியான ராசாகண்ணுவின் மனைவி பார்வதியும், இந்தச் சந்திப்பில் உடனிருந்தார்.
பார்வதிக்குச் சொந்த ஊரில் வீடு கட்டிக் கொடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்தோம். அலங்காநல்லூர், ஆம்பூர் சக்கரை ஆலைகளைத் திறக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத்தடுக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு