ரேபிடோ செயலி வழக்கு: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை! - chennai high cort
சென்னன: இருசக்கர வாகனத்தை வணிக ரீதியில் பயன்படுத்தும் ரேபிடோ செயலிக்கு தடைவிதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![ரேபிடோ செயலி வழக்கு: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4187429-1098-4187429-1566291473055.jpg)
இருசக்கர வாகனத்தை வணிக ரீதியில் பயன்படுத்துகிறது ரேபிடோ செயலி. இந்நிலையில், மோட்டார் வாகனச் சட்டப்படி சொந்த வாகனத்தை வணிகரீதியில் பயன்படுத்தக் கூடாது. இருசக்கர வாகனத்தை வாடகை சேவைக்கு பயன்படுத்த விதிமுறை இயற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கூகுள், ஆப்பிள் இணையதள சேவையிலிருந்து இந்தச் செயலியை நீக்குமாறு சென்னை மாநகர காவல் துறை ஆணையர் பரிந்துரை செய்தார்.
காவல் துறை ஆணையரின் உத்தரவை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருசக்கர வாகன பின் இருக்கையை வாடகைக்கு பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு விதிமுறைகளை உருவாக்கும் வரை, ரேபிடோ செயலியை அனுமதிக்க முடியாது எனக் கூறி தடையை நீக்க முடியாது என உத்தரவிட்டார்.