தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊரடங்கைப் பயன்படுத்தி கரோனா சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் - ராமதாஸ் - சென்னை

சென்னை: 12 நாள்கள் முழு அடைப்பு முடிவதற்குள் கரோனா பாதித்தவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு, மருத்துவம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ramadoss
ramadoss

By

Published : Jun 18, 2020, 1:28 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, புறநகர்ப் பகுதிகளில் கரோனா வைரஸ் (தீநுண்மி) நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இன்று நள்ளிரவு முதல் இம்மாத இறுதிவரை 12 நாள்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதை வெறுப்பாகக் கருதாமல் வாய்ப்பாக நினைத்து அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதன்மூலம்தான் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம்கண்டு மருத்துவம் அளிக்க முடியும். உங்களது குடும்பத்தில் எவருக்கேனும் கரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக, அரசின் 104 என்ற இலவச எண்ணில் தொடர்புகொண்டு, சோதனை செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் ஒருவருக்கு உள்ள நோய் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முடியும்.

அதேபோல், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, சோதனைகளை அதிகரிக்க வேண்டும். 12 நாள்கள் முழு அடைப்பு முடிவதற்குள் கரோனா பாதிப்பு உள்ளவர்கள் அனைவரையும் அடையாளம்கண்டு, மருத்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மொத்தத்தில் இந்த முழு ஊரடங்கு முடியும்போது கரோனா இல்லாத சென்னை மலர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘கரோனா மையங்களில் சித்த மருத்துவத்தை அனுமதியுங்கள்’ - அன்புமணி ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details