இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லியில் அரசுத் துறையில் 17 சோதனை மையங்கள், தனியார் துறையில் 23 மையங்கள் என மொத்தம் 40 மையங்கள் உள்ளன.
அவற்றில் நாளொன்றுக்கு 8,600 பேருக்கு சோதனைகள் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக அரசுத் துறையில் 45, தனியார் துறையில் 34 என மொத்தம் 79 மையங்கள் உள்ளன. சென்னையில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் உள்ளன.
டெல்லியில் 6 நாள்களில் கரோனா சோதனைகளின் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த முடியும்போது, சென்னையிலும் நிச்சயமாக உயர்த்த முடியும்.
அதிக எண்ணிக்கையில் சோதனைகள் செய்யப்பட்டால், அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள். டெல்லியில் அவசரத் தேவைகளுக்காக தொடர்வண்டிப் பெட்டிகள் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன.